திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் மோரை ஊராட்சியில் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீராபுரம் சமுதாய நலக் கட்டிடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
மோரை ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.திவாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டத்தில்,
கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல் இணைய வழி வரி செலுத்தும் சேவைகள், இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், சுய சான்றின் அடிப்படையில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு உடனடி அனுமதி வழங்குதல், தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு (TN PASS) குறித்து விவாதித்தல் தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியம் உயிரிப்பல்வகைமை மேலாண்மை குழு குறித்து விவாதித்தல், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) தூய்மையான குடிநீர், ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், குழந்தைகள் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் 2012 உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மோரை ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.திவாகரன் மோரை அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்கள், சென்ற கல்வி ஆண்டில் 10 மற்றும் 12 வது வகுப்பில் சிறப்பிடம் பிடித்த மாணவ – மாணவியருக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வி.கார்த்திக் வட்டார வளர்ச்சி அலுவலர் இராஜேந்திரன் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் (திருவள்ளூர்) ஜெபக்குமாரி ஊராட்சி மன்ற செயலர் எஸ்.உமயபார்வதி மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.