திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக துப்பறியும் மோப்ப நாய் லீமாவிற்கு பணி நிறைவு விழா நடைபெற்றது. இவ்விழாவில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் பிரதீப் தலைமை தாங்கினார். ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் ஜோசப் நிக்ஸன், ஆய்வாளர் காளீஸ்வரன், சப் இன்ஸ்பெக்டர் ஜெயசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் எட்டு வருடமாக துப்பறியும் மோப்பநாய் படை பிரிவில் பணியாற்றி வந்த லீமா என்ற துப்பறியும் நாயின் பணி நிறைவு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. பணி நிறைவுக்கு பிறகு லீமா என்ற நாயை துப்பறியும் மோப்ப நாய் படை பிரிவிலேயே வைத்து பாதுகாக்கப்படும் என்று காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.



