ஈரோடு டிச 22
நந்தா பொறியியல் கல்லூரியின் 19வது மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் 13வது பட்டமளிப்பு விழா
ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட
டெல்லியில் செயல்பட்டு வரும் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சக ஆராய்ச்சி துறையின் விஞ்ஞானி முனைவர் சசீகுமாரை வரவேற்று அறிமுகம் செய்து வைத்தார்.
மேலும் அவர் பேசும்போது பட்டம் பெறும் மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் தங்களது வாழ்க்கையில் சீரோடும் சிறப்போடும் வாழ எனது வாழ்த்துக்கள் என்று கூறினார்
நந்தா பொறியியல் கல்லூரியின் முதல்வர் ரகுபதி மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் நந்தகோபால் ஆகியோர் நடப்பு கல்வியாண்டில் அனைத்து துறைகளிலும் அடைந்த முன்னேற்றங்கள், அவற்றில் பேராசிரியர்கள். உதவி-பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்குகள் கொண்ட ஆண்டறிக்கையினை வாசித்தார்.
இதனை தொடர்ந்து. சிறப்பு விருந்தினர் விஞ்ஞானி முனைவர் எ
சசீகுமார் நந்தா பொறியியல் தன்னாட்சி கல்லூரியில் பயின்று தரவரிசையில் இடம் பெற்ற 41 மாணவர்கள் உட்பட இளங்கலை பொறியியல் துறையில் 674 மாணவர்கள், முதுகலை பொறியியல் துறையில் 123 மாணவர்கள் ஆக மொத்தம் 797 மாணவர்களுக்கும் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுபாட்டிலுள்ள நந்தா தொழில்நுட்ப கல்லூரியில் தரவரிசையில் இடம் பெற்ற இளங்கலை பொறியியல் துறையில் சிறப்பித்தார்கள். 5 மாணவர்கள் உட்பட 191 மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கினார்.
ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் எஸ். நந்தகுமார் பிரதீப். நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ். திருமூர்த்தி. முதன்மை நிர்வாக அதிகாரி
முனைவர் எஸ்.ஆறுமுகம் மற்றும் தொழில்நுட்ப வளாகத்தின் நிர்வாக அலுவலர்
ஏ.கே. வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இவ்விழாவினை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்த அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்களை கல்லூரி நிர்வாகத்தினர்கள் பாராட்டினார்கள்.