காஞ்சிபுரம், ஏப்ரல்; 07-
தமிழகத்தில் நவரை பருவ நெல்பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு தற்போது அறுவடை செய்து வருகின்றனர். விவசாயிகளின் நெல்லுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் மத்திய அரசின் தேசிய கூட்டுறவு கூட்டமைப்பு சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் அடுத்த எடமச்சி ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது.
இதற்கு, திமுக சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் டி.குமார் தலைமையேற்றார். எடமச்சி ஊராட்சி மன்ற தலைவர் ஏ. தர்மராஜ் முன்னிலை வகித்தார்.
இதில், சிறப்பு அழைப்பாளராக, உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளருமான க. சுந்தர் கலந்து கொண்டு நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், இந்து சமய மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் எஸ்.ஆர்.வெங்கடேசன்,ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணி, திமுக சாலவாக்கம் ஒன்றிய பொருளாளர் பாலமுருகன், எடமச்சி ஊராட்சி மன்ற துணை தலைவர் ஆனந்தன், திமுக காஞ்சிபுரம் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் முரளிதரன், எடமச்சி ஊராட்சி முன்னாள் தலைவர் ஏழுமலை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



