தக்கலை செப்-26
தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பின் குமரி மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தக்கலை அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரைமண்ட் தலைமையேற்றார். மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் மாவட்ட பொருளாளர் சாந்த சீலன் அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் டோமினிக்ராஜ் நடைபெற்ற வேலைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தார்.
மாநிலத் தலைவர்
கண்ணன் சிறப்புரையாற்றினார்.
வட்டார, கல்வி மாவட்ட, மாவட்ட பொறுப்பாளர்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்விக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் அனைத்து நலத் திட்ட உதவிகளும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவு படுத்தப்பட வேண்டும்.
ஆங்கில வழி இணை பிரிவு மாணவர்களையும் கணக்கிட்டு பணி இட நிர்ணயம் செய்வதோடு அரசு அனுமதித்த காலிப் பணியிடங்களில் நியமனம் பெற்ற அனைத்து நிலை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்தம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி
நடைபெறுகின்ற மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கத்தை வெற்றியடையச் செய்வதோடு, இக் கையெழுத்துப் படிவங்களில் கல்வி ஆர்வலர்கள், பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கையெழுத்துக்களைப் பல்லாயிரக் கணக்கில் பெற்று 09.10.2024 அன்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பெருந்திரள் முறையீடாக அளிப்பது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.
மேலும் அரசு அனுமதித்த காலிப்பணி இடங்களில் விதிகளுக்கு உட்பட்டு நியமனம் செய்யப்பட்ட
ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மேலும் காலம் தாழ்த்தாமல் நியமன ஏற்பளிப்பு அளித்து ஊதியம் வழங்கிட முதன்மைக் கல்வி அலுவலரை வலியுறுத்தி 17.10.2024 அன்று முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என்றும்
இந்நிகழ்வுகளை ஒட்டி அக்டோபர் முதல் வாரத்தில் அனைத்து உதவி பெறும் பள்ளிகளிலும் ஆசிரியர் சந்திப்பு இயக்கம் நடத்துவது என்றும்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் பொதுச்செயலாளர் கனகராஜ் நிறைவுரையாற்றினார்.
மார்த்தாண்டம் கல்வி மாவட்டத் தலைவர் பிரைட்சிங் மோரீஸ் நன்றி கூறினார்.
நாகர்கோவில் கல்வி மாவட்டத் தலைவர் தினேஷ் ஆண்டன் ஜோசுவா,
செயலாளர் ராபர்ட் பெல்லார்மின், பொருளாளர் எய்டன் மைக்கேல், மாநில துணைப் பொதுச் செயலாளர் சிவஸ்ரீ ரமேஷ், மாவட்ட அமைப்புச் செயலாளர் வினோத், துணைத் தலைவர் பிறேம்குமார், நிர்வாகிகள் ராஜேஷ், லாரன்ஸ், ஷெரின், ஜார்ஜ் தாஸ், தேவ சோபனராஜ், பிரசாத், கிங்சிலி, செல்வதாசன், செல்வராஜன், கென்னெடி, ஆரீஃப், உட்பட பலர் கலந்து கொண்டனர்.