தென்காசி மார்ச் 26
தென்காசி மாவட்டம் தென்காசிக்கு அருகே உள்ள பைம் பொழில் அருள்மிகு திருமலை குமார் சாமி திருக்கோவிலில் கிரிவலப்பாதை அமைக்க அரசு அனுமதி தந்தால் உடன் பணிகள் துவங்கப்படும் என அக்கோவிலின் அறங்காவல் குழு தலைவர் அருணாச்சலம் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள முருகன் வீற்றிருக்கும் மலைக்கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள பைம்பொழில் திருமலையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் அருள்மிகு திருமலை குமாரசாமி திருக்கோவிலும் ஒன்று. துவக்க காலத்தில் சுமார் 600 க்கும் மேற்பட்ட மலைப் படிக்கட்டுகளில் நடந்தே சென்று தான் சுவாமியை தரிசனம் செய்து வந்த பக்தர்கள் கோடை காலங்களில் அதுவும் குறிப்பாக முதியவர்கள் கர்ப்பிணி பெண்கள் அந்த படிகளில் ஏற முடியாமல் சுவாமி தரிசனம் செய்யாமல் அடிவாரத்தில் இருந்தே சுவாமியை வழங்கிவிட்டு மிகவும் சிரமப்பட்டு வந்தனர் இந்த நிலையில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல வசதியாக மலைப்பாதை அமைக்க அப்போதைய ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டது இதை தொடர்ந்து மலைப்பாதை அமைக்கும் பணிகள் நடந்தேறிய நிலையில் திமுக தலைமையிலான தமிழக அரசு அந்த மலைப் பாதையை பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து அர்ப்பணித்தது இதனால் கோவில் வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலை தெரிவிப்பதோடு போக்குவரத்து இடையூறு இன்றி எந்தவித ஆபத்தும் இல்லாமல் சிரமமின்றி பக்தர்கள் முதியவர்கள் கர்ப்பிணி பெண்கள் அனைவரும் அடிவாரத்திலிருந்து கோவில் நிர்வாக மூலம் செயல்பட்டு வரும் சிறப்பு பேருந்துகள் மூலம் மலைக் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர் இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது பல்லாயிரக்கணக்கான கோயில்களில் கும்பாபிஷேகம் கிரிவலப் பாதைகள் உள்கட்டமைப்புகள் எல்லாம் செய்து பக்தர்கள் வசதிகளை மேம்படுத்தி வருகிறது அரசு அந்த வகையில் திருமலை கோவிலுக்கு அண்மையில் நடைபெற்ற அறங்காவலர் குழு தலைவராக கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த அரசு ஒப்பந்தக்காரர் அருணாச்சலம் என்பவர் தேர்வு செய்யப்பட்டார் தான் பதவி பொறுப்பு ஏற்றத்துக்கு பின் முதன்முதலாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார் அந்த பேட்டியின் போது அவர் தெரிவித்ததாவது: கிட்டத்தட்ட இந்த கோவிலுக்கு என்னாலான உதவிகளை பல்வேறு தருணங்களில் பகவான் அருளிய படி பல்வேறு திருப்பணிகளை செய்து வந்துள்ளேன் அந்த அடிப்படையில் தற்போது பக்தர்களின் நீண்ட நெடுநாள் கோரிக்கையான மலைக்கோவிலை சுற்றி ஆறு கிலோமீட்டர் தூரம் கிரிவல பாதைகள் அமைக்க கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசிற்கு கோரிக்கை வைத்த வண்ணமாக உள்ளனர் இந்த நிலையில் புதிதாக அறங்காவலர் குழு தலைவராக தேர்ந்தெடுத்த என்னிடம் இந்த தருணத்தை பயன்படுத்தி எப்படியாவது கிரிவலப்பாதையை அரசிடம் அனுமதி வாங்கி செய்து கொடுங்கள் இது அந்த பகவான் பாலமுருகனின் கட்டளை என ஆன்றோர்களும் சான்றோர்களும் பெரியவர்களும் பக்தர்களும் அவ்வப்போது என்னிடம் எடுத்துரைத்து மனுக்களும் கொடுத்தனர். இதை யடுத்து அதிகாரிகளை கலந்தாலோசித்து விரைவில் தமிழக முதல்வர் ஸ்டாலினையும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாவையும் இந்து சமய அறநிலைத்துறை ஆணையரையும் நேரில் சந்தித்து சிறப்பு அனுமதி வாங்கி கிரிவலப் பாதையை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்தார் .,.