அரியலூர், செப்:16
அரியலூர் மாவட்டம் செந்துறை தெற்கு ஒன்றியம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு செந்துறை பால் பண்ணை அருகில் அமைந்துள்ள திமுக கட்சி அலுவலகத்தின் முன் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு அரியலூர் மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும் சா.சி. சிவசங்கர் அவர்களின் வழிகாட்டுதலின்படி செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமையில் , கட்சியின் மூத்த முன்னோடிகள், மாவட்ட மாநில நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள், கட்சியின் மகளிர் அணியினர், தகவல் தொழில்நுட்ப அணியினர், இளைஞர் அணியினர் என பலரும் கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பூக்கள் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து திமுக கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கும் , கட்சியின் நிர்வாகிகளுக்கும், பேருந்து பயணிகளுக்கும் (லட்டு) இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.