கரூர் மாவட்டம் – மே – 2
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிந்தலவாடி ஸ்ரீ. மகா மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு தூக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் தூக்கு தேரினை தூக்கி வலம் வந்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிந்தலவாடியில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் வைகாசி பெருந்திருவிழாவினை முன்னிட்டு கடந்த மே 5ம் தேதி கம்பம் ஊன்றுதல் பூச்சொரிதல் விழாவுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து கடந்த மே 16ஆம் தேதி முதல் சிந்தலவாடி, மேல சிந்தலவாடி, கீழ சிந்தலவாடி, விட்டுக்கட்டி, லாலாபேட்டை, மகிளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பால்குடம் தீர்த்த குடம் எடுத்து வந்து வழிபட்டனர். வைகாசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தூக்கு தேரோட்ட நிகழ்ச்சி இன்று வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த தூக்கு தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ மகா மாரியம்மன் உற்சவர் சிலையினை பல 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கள் தோளில் சுமந்து கோவிலினை மூன்று முறை வலம் வந்தனர்.
இந்த தூக்கு தேரோட்ட நிகழ்ச்சியில் சிந்தலவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தும் மாவிளக்கு படைத்தும் தேங்காய் பழம் உடைத்தும் அர்ச்சனை செய்து வழிபட்டனர்