தருமபுரி நகர திராவிட முன்னேற்ற கழக சார்பில் இலவச நீர், மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகில் நகர செயலாளர் நாட்டான் மாது ஏற்பாட்டில் நடைபெற்றது . தருமபுரியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்த நிலையில் திமுக நகர சார்பில்
இலவச நீர் ,மோர் பந்தல் திறந்ததற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட செயலாளர் தர்ம செல்வன், நாடாளுமன்ற உறுப்பினர் மணி, நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட பொருளாளர் தங்கமணி, நகர துணை செயலாளர் முல்லைவேந்தன், சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட அமைப்பாளர் ரஹீம், முன்னாள் இந்நாள் வார்டு உறுப்பினர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி பழம், வெள்ளரிக்காய், வாழைப்பழம், மோர் ஆகியவை வழங்கப்பட்டது.