வேலூர்_20
வேலூர் மாவட்டம் வேலூர் கிங்ஸ் ரோட்டரி சங்கம் ,வேலூர் சித்தா ஆயுர்வேத மருந்தகம், ஸ்ரீ அகத்தியர் சித்த வைத்தியசாலை மற்றும் வேலூர் மாவட்ட மைய நூலகம் இணைந்து நடத்திய இலவச சித்த மருத்துவ முகாம் வேலூர் மாவட்ட மைய நூலகத்தில் வேலூர் மாவட்ட நூலக அலுவலர் கு.இரா.. பழனி முன்னிலையில் நடைபெற்றது. இதில் சித்த மருத்துவர்கள் டாக்டர் எஸ். லட்சுமணன், டாக்டர் பி .ஜலஜா , டாக்டர் பி. பாலசுப்பிரமணியன், டாக்டர் எஸ் .ஸ்ரீமதி மற்றும் ரோட்டரி தலைவர் வி .நடனசிகாமணி, செயலாளர் பி .மணிகண்டன், பொருளாளர் எம். வினோத்குமார், சமுதாயப் பணி இயக்குனர் பி பாலசுப்ரமணியன், வேலூர் மாவட்ட மைய நூலகம் மகளிர் பிரிவு சசிரேகா மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.