தென்தாமரைகுளம்., டிச. 30.
எட்டுக்கூட்டுத்தேரிவிளையில் தங்கத்தலைவன் ரஜினிகாந்த் நற்பணி மன்றம் சார்பில் நடிகர் ரஜினிகாந்த்-ன்
75-வது பிறந்தநாள் விழா மற்றும் மன்ற 26-வது ஆண்டுவிழா
இரண்டு நாட்கள் நடைபெற்றது.
முதல்நாளான சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
மதியம் 2 மணிக்கு விளையாட்டுப் போட்டிகளும், இரவு 7 மணிக்கு திரைப்படமும் திரையிடப்பட்டது.
இரண்டாம்நாளான
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6மணி வரை
விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது,
6 மணிக்கு
இனிப்பு வழங்குதலும்,இரவு 7.30 மணிக்கு10, 12-ம் வகுப்பில் 2023-2024 கல்வியாண்டில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்குதலும்
,8 மணிக்கு இரவு நேர கலைநிகழ்ச்சிகளும்,
10 மணிக்கு பரிசு வழங்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை தங்கத்தலைவன் ரஜினிகாந்த் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.