சேலம் டி.எம்.எஸ்.கண் மருத்துவமனையில் சேலம் இன்னர் வீல் கிளப் சேலம் வடக்கு மற்றும் சேலம் மைத்திரி இன்னர் வீல் கிளப், டி.எம்.எஸ் கண் மருத்துவமனை இணைந்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் சேலம் மைத்திரி இன்னர் வீல் கிளப் சங்கத் தலைவி சுனிதா ரகு,செயலாளர் பத்மப்ரியா ராஜேஷ்,வாணி எழில்,
ஹேமா அருள்,மற்றும் இன்னர் வீல் கிளப் சேலம் வடக்கு சங்கத் தலைவி விஜயலட்சுமி தேவராஜன், சண்முகப்பிரியா மணிகண்டன்,ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பட்டினை சிறப்பாக செய்திருந்தனர். இதில் ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்வமுடன் வந்து கண் பரிசோதனை செய்து கொண்டனர்.கலந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவருக்கும் கிளப் சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டன.