எம்.எல்.ஏ ,எம்.பி பங்கேற்பு
பென்னாகரம்ஆக.13 –
பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ,12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.விழாவிற்கு முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார்,பள்ளி துணை ஆய்வாளர் பொன்னுசாமி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே மணி எம்.எல்.ஏ தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி எம்.பி ஆகியோர் கலந்து கொண்டு 373மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கிப் பேசினர்.விழாவில் பேரூராட்சி தலைவர் வீரமணி, ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் ஒன்றிய செயலாளர்கள் மடம் முருகேசன், செல்வராஜ் மாவட்ட துணை செயலாளர் ரேணுகாதேவி ,பள்ளி தலைமை ஆசிரியர்கள் லோகநாதன், விஜயலட்சுமி தமிழாசிரியர் முனியப்பன் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்