காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வெங்காடு கிராமத்தில் இயங்கி வரும் ஸ்பார்க் மெண்டா பவுண்டேஷன் கம்பெனி மூலமாக இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மற்றும் தையல் கிளாஸ் நடத்தி பிள்ளைகளுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வந்தனர் இதில் 100% தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஏரி நீர் பாசன சங்கத் தலைவர் மற்றும் முன்னாள் திருபெரும்புதூர் கூட்டுறவு வங்கி தலைவரும்,
முன்னாள் வெங்காடு ஊராட்சி மன்றத் தலைவருமான வெங்காடு பி.உலகநாதன் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினார்.
அப்போது வெங்காடு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்திரன், ஊராட்சி செயலாளர் ராஜு மற்றும் பார்க் மிண்டா நிர்வாக ஹெச் ஆர். மற்றும் உமா சொர்ணம் பாலா ஆகியோர்கள் உட்பட
கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.