பரமக்குடி,ஜூலை.9 : ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகா விளத்தூர் கிராம நியாயவிலைக்கடையில் பொதுவிநியோகத்திட்டதில் வழங்ப்படும் அரிசி பெரும்பாலான மக்களுக்கு வழங்கப்படவில்லை, மாத கடைசி நாள் வரை பொது விநியோகத்திட்ட பொருட்கள் வழங்கப்படவில்லை, போதுமான அளவில் நியாயவிலைக்கடையில் இருப்பு இல்லை என பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் விளத்தூர் நியாயவிலைக்கடையில் பரமக்குடி வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் சார்பதிவாளரால் தணிக்கை செய்யப்பட்டது.அப்போது„ பொதுமக்களின் புகார் உண்மை என தெரிய வந்ததன் அடிப்படையில், நியாயவிலைக்கடை விற்பனையாளர் ஜெனிட்டா மைக்கேல் என்பவருக்கு அபராத தொகை வசூலிக்கப்பட்டு, ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை துணைப்பதிவாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். விளத்தூர் நியாயவிலைக்கடை அட்டைதாரர்களுக்கு கஞ்சியேந்தல் கிராம நியாயவிலைக்கடை



