தென்தாமரைக்குளம் ஏப் 25
கொட்டாரம் அடுத்துள்ள நாராயண சுவாமி நிழல் தாங்கலில் ரூ.1.50 கோடி மதிப்பில் மணிமண்டப கோபுரம் கட்டப்படுகிறது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.ஊர் தலைவர் தங்கவேல், ஆலோசகர் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் சகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அடிக்கல் நாட்டு விழாவில் கன்னியாகுமரி தொகுதி எம்.பி., விஜய் வசந்த்,கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி செயலாளர் ராஜன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் தாமரை தினேஷ், கொட்டாரம் பேரூர் அதிமுக செயலாளர் ஆடிட்டர் சந்திரசேகர்,அய்யாவுநாடார், மணிவண்ணன்,சந்திரசேகர பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.