ஜனவரி :25
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 15-வது மத்திய நிதிக்குழு மானியத்திட்டம், நபார்டு மற்றும் தேசிய சுகாதார இயக்கம் ஆகிய திட்டங்களின் கீழ் ரூ.1.06 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.17.59 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்கள்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சி, வடுகபாளையத்தில் 15-வது மத்திய நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.74.00 இலட்சம் மதிப்பீட்டில் சி.டி.சி காலனி முதல் வடுகபாளையம் வரை குடிநீர் பிரதான குழாய்கள் பதித்து, ஸ்ரீ நகர் பகுதியில் புதியதாக கட்டப்பட்ட 2.00 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி, ரூ.32.00 இலட்சம் மதிப்பீட்டில் மங்கலம் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு அருகில் 2.00 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தும்,
பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் காங்கேயம் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அரசு கூடுதலாக ஒருங்கிணைத்த பொது சுகாதார ஆய்வக கட்டடம் கட்டும் பணி, ரூ.3.44 கோடி மதிப்பீட்டில் பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதலாக 12 வகுப்பறை கட்டடங்கள் மற்றும் ஆய்வக கட்டடம் கட்டும் பணி, ரூ.3.53 கோடி மதிப்பீட்டில் கணபதிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 15 வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணி, ரூ.1.41 கோடி மதிப்பீட்டில் அறிவொளி நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி, ரூ.2.58 கோடி மதிப்பீட்டில் பல்லடம் அண்ணாநகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கூடுதலாக 10 வகுப்பறை கட்டடம், மாணவ, மாணவி
யர்களுக்கான கழிவறை கட்டடம் மற்றும் குடிநீர் பணி, ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கரடிவாவி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் கட்டும் பணி, ரூ.2.12 கோடி மதிப்பீட்டில் கருகம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9 வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணி என மொத்தம் ரூ.17.59 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்து, ரூ.1.06 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்ட
பணிகளை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்
மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்தார்கள்.இந்நிகழ்ச்சியில், திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் மோகனசுந்தரம் பல்லடம் நகர்மன்றத்தலைவர் திருமதி கவிதாமணி இராஜேந்திரகுமார்,
உதவி செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) செந்தில் கமலகண்ணன், பல்லடம் நகராட்சி ஆணையாளர்
மனோகரன், நகராட்சி பொறியாளர் திரு.சுகுமார், நகர திமுக செயலாளர் ராஜேந்திர குமார். நகராட்சி உறுப்பினர்கள்.
தண்டபாணி மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கராஜ்
விளையாட்டு அணி அமைப்பாளர் ஜெகதீஷ்.இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜசேகர். பாலசுப்பிரமணியம்.உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்….