சேலம் மாவட்டம்
சேலம் புறநகர் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ஆர். இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தை வீரபாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜமுத்து முன்னிலை வகித்தார். வீரபாண்டி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் வரதராஜ் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் கொள்கை பரப்புத் துணைச் செயலாளரும் திரைப்பட நடிகை கௌதமி தலைமை பேச்சாளராக சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொழுது சேலம் புறநகர் மாவட்டம் அம்மா பேரவை துணைத் தலைவர் C.P சித்துராஜி , வீரபாண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் எம் வெங்கடேசன், பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், பனமரத்துப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலச்சந்திரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர்.