ஈரோடு மே 31
ஈரோடு பெருத்துறை ரோடு யு ஆர் சி நகர் ஸ்டேட் வங்கி எதிரில் புதிதாக எஸ்.எஸ்.எஸ். சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழாவுக்கு மருத்துவனை தலைவர் சரவண பவன் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் டாக்டர் சஞ்சித் மருத்துவ இயக்குனர் டாக்டர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் கவர்
னருமான பி.சதாசிவம், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.சுந்தரேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி புதிய மருத்துவமனையை திறந்து வைத்தனர்.
விழாவில் அமைச்சர் முத்துசாமி, முன்னாள் அமைச்சர் என். கே.கே.பி.ராஜா. கே.இ.பிரகாஷ் எம்.பி. வி.சி. சந்திரகுமார் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் நாகரத்தினம், வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சந்திரசேகர் கிரீன் பீல்ட் கட்டுமான நிறுவன உரிமையாளர் சதாசிவம் இந்து கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே கே பாலுசாமி சண்முகா குழும நிறுவனங்களின் தலைவர் ராஜமாணிக்கம்
கே.கே.எஸ்.கே இண்டர்நேஷனல் நிறுவன உரிமையாளர் கே.கே.எஸ் கே ரபீக் எம் சி ஆர் நிறுவனத்தின் உரிமையாளர் எம்.சி. ராபின் மற்றும் பிரமு கர்கள் தொழில் அதிபர்கள் உள்பட பலர் கலந்துகொண் டனர்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகிகள் கூறுகையில் புதிய மருத்துவமனையில் 150 படுக்கை வசதிகள், 4 அறுவை சிகிச்சை அரங்குகள், அதி நவீன 3டி ஏஐ தொழில் நுட் பத்துடன் கூடிய கேத்லேப், 30 படுக்கைகளுடன் கூடிய அவசர சிகிச்சை பிரிவு போன்ற பல்வேறு வசதிகள் உள்ளன என்று கூறினர்.



