ஈரோடு ஜன. 29
இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் கோட்ட பொதுக்குழு கூட்டம் ஈரோடு முள்ளம் பரப்பில் நடைபெற்றது. அங்கு குடியரசு தின விழாவை யொட்டி தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
இதன் பிறகு நடந்த பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார் பன்னீர் தாஸ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். இதில்
மாநில செயலாளர்கள் செந்தில்குமார் சண்முகம் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் ஈரோடு மாவட்ட தலைவர் ஜெகதீசன் ஈரோடு மாவட்ட பொதுச் செயலாளர் கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர் .
கூட்டத்தில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு மற்றும் வழிபாட்டு வசதிகளை உரிய முறையில் செய்து கொடுக்க வேண்டும். தமிழகத்தில் ஊடுருவும் வெளிநாட்டினரை தடுத்து நிறுத்த வேண்டும்.
ரெயில் கவிழ்ப்பு சதி திட்டங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.