ஈரோடு நவ 26
ஈரோடு வீரப்பன்
சத்திரம் பகுதி திமுக சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 47 வது பிறந்த நாளை ஒட்டி உதயநிதி கோப்பைக்கான வில்வித்தை
போட்டி ஈரோடு காவிரி ரோட்டில் நடந்தது . பகுதி செயலாளர்
வி.சி. நடராஜன் தலைமையில் நடந்த இந்த போட்டியை மாநகர செயலாளர் சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். இதில் 49 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். அவர்களை அங்கு கூடியிருந்த திமுக பிரமுகர்களும் பொதுமக்களும் கைதட்டி உற்சாகப்படுத்தினர் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் முத்துசாமி பதக்கம் மற்றும் கோப்பைகளை வழங்கினார் .
இந்த நிகழ்ச்சியில் மேயர் நாகரத்தினம் மாவட்ட பொருளாளர் பி கே பழனிச்சாமி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம் பார்வையாளர் நாகராஜ் வக்கீல் ராதாகிருஷ்ணன் சீனிவாசன் வார்டு செயலாளர்கள் சுப்பிரமணியம் தங்கமணி மாணிக்கம் சங்கமேஸ்வரன் பகுதி நிர்வாகிகள் அம்சத் பாட்சா குமார் கல்யாணி ராமசாமி ரகுபதி ஆதம் இளங்கோ மாணவர் அணி சிவா உள்பட பலர் கலந்து
கொண்டனர்.



