நாகர்கோவில் ஆக 4
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, தோவாளை ஊராட்சி ஒன்றியம், காட்டுப்புதூர் ஊராட்சியில் 9-வது வார்டு உறுப்பினராக முருகன் உள்ளார். இவர் 25 ஆண்டு காலமாக இப்பகுதியில் ஊராட்சி உறுப்பினராக இருந்து மக்கள் பணியாற்றி வருகிறார். இவர் தற்போது நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அறிந்த முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம், நேற்று வார்டு உறுப்பினர் முருகன் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறியதுடன், நிதி உதவியினையும், மளிகைப் பொருட்களையும் வழங்கினார். அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்து உதவிகள் ஏதேனும் தேவைப்பட்டால் தன்னை அணுகுமாறு கூறி தொடர்ந்து அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கவும் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் தோவாளை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொன்.சுந்தர்நாத், ஒன்றிய கவுன்சிலர் ஐயப்பன், காட்டுப்புதூர் ஊராட்சித் தலைவர் கிறிஸ்டிபாய் உட்பட பலர் உடன் சென்றனர்.