திருப்பூர்டிச. 3 திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு
31 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
திருப்பூர் தென்னம்பாளை யம் மீன்மார்க்கெட்டில் மீன்கள் மொத்த மற்றும் சில்லரை விற்பனை செய்யப்பட்டு வரு கிறது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இங்கு மீன்கள் வாங்குவது வழக்கம்.
அதுபோல் விடு முறை நாட்களில் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க பொது மக்கள் ஏராளமானோர் வருவது உண்டு.
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத் தரவின் பேரில் தென்னம்பா ளையம் மீன்மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜயலலி தாம்பிகை தலைமையில், அதிகாரிகள் கிருஷ்ணமூர்த்தி, சிரஞ்சீவி மற்றும் மீன்வள ஆய்வாளர் ரெஜினா ஜாஸ் மின் ஆகியோர் மீன்மார்க் கெட் மற்றும் அதனை சுற்றி யுள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
கெட்டுப்போன மீன்கள் அழிப்பு
இந்த ஆய்வின் போது மீன் மார்க்கெட்டில் விற்பனைக் காக வைக்கப்பட்டிருந்த 31 கிலோ அளவிலான கெட்டுப் போன மீன்கள் மற்றும் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
வியாபாரிகளிடம் அதிகாரிகள், மீன்கள் விற்பனை செய்யப்படும் இடம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக் கப்பட வேண்டும். விற்ப னைக்கு இருப்பு வைக்கப் படும் மீன்கள் சரியான வெப்ப நிலையில் பராமரிக்கப்பட வேண்டும். விற்ப னைக்கு வைக்கப்படும் மீன் கள் முதலில் வருபவை
முதலில் விற்பனை என்ற முறையில் வைக்கப்பட வேண்டும்.
மீன் விற்பனை செய்பவர்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டும். உணவு பாதுகாப்புத்துறை உரிமம் கடைகளில் காட்சிப்
படுத்தப்பட வேண்டும்.
கெட்டுப்போன மற்றும் பழைய மீன்களை விற்பனை செய்யக் கூடாது. மீன் கொள்முதல் செய்யப்படும் பில்களை முறையாக பராமரிக்கவேண் டும். மீன்கள் இருப்புவைக்கப் பட பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகள் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டி ருக்க வேண்டும்.
மீன்கள் வாங்கும் பொதுமக்கள் மீன்களின் கண்கள் பிரகாசமாக இருப்பதை பார்த்து வாங்க வேண்டும். மீன்களின் செதில்கள் சிவப்பு மற்றும் பிங்க் நிறத்தில் இருப் பதை பார்த்து வாங்க வேண்டும். மீன்களின் மையப்பகுதி யில்லேசாக அழுத்தும்போது அந்த பகுதி மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். என அறிவுரை வழங்கினார் மேலும் உணவு குறித்து ஏதேனும் புகார்கள் இருந்தால் உடனடியாக94440-42322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தினார்.