சென்னை, டிச – 23,
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவு திருவிழாவை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து, மகளிர் குழுக்களோடு இணைந்து பிரம்மாண்டமான கேக் தயாரிப்பில் உலர் பழ வகைகள் உயர்தர பருப்பு வகைகள் அடங்கிய மூலப்பொருட்களை கொண்டு கேக் கலவை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் .
இதில் தென்னிந்திய மற்றும் படுகர் உள்ளிட்ட மலை வாழ் மக்களின் பாரம்பரிய உணவுகள் என 100 க்கும் மேற்பட்ட ஸ்டால் கள் அமைக்கபட்டிருந்தை பார்வையிட்டார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு, மேயர் ஆர் . ப்ரியா, துணை மேயர் எம். மகேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் செஞ்சி மஸ்தான், எஸ். சுதர்சனம், தாயகம் கவி, ஆர்.டி சேகர், த. வேலு, ஆ வெற்றிஅழகன், ஏ .எம் .வி பிரபாகராஜா, ஜோசப் சாமுவேல் மற்றும் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலர் சுகன்தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ. குமரகுருபரன், சென்னை மாநகர மாநகராட்சி நிலை குழு தலைவர் ( பணிகள்) நே.சிற்றரசு , மண்டல குழு தலைவர் எஸ் . மதன்மோகன் , தமிழ்நாடு மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குனர் ஸ்ரேயா பி. சிங், மற்றும் உயர் அதிகாரிகள் மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.