மதுரை மே 14
மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வண்டியூர் சௌராட்டிராபுரத்தில் மாருதி உட் ஒர்க்ஸ் நிறுவனமும் மற்றும் வைகை விஸ்வகர்மா அறக்கட்டளையும் இணைந்து
கள்ளழகரை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு கோடை வெயிலை தடுக்கும் வகையில் நீர் மோர் மற்றும் புலிகரசல் எனும் பானக்கம் போன்ற நீர் ஆதாரங்களையும் இதனை தொடர்ந்து 2, நாள் சேவையாக காலை மாலை ஆகிய இரு வேளைகளிலும் சிற்றுண்டி உணவுகள் வழங்கப்பட்டது.
இதன் மூலம் அந்த பகுதியில் கள்ளழகரை இரண்டு நாட்களாக தரிசிக்க வந்த பல ஆயிரம் பக்தர்கள் பயன் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான ஏற்பாடுகளை மாருதி உட் ஒர்க்ஸ் நிறுவனத்தின் இயக்குநரும் வைகை விஸ்வகர்மா அறக்கட்டளை நிறுவனத் தலைவருமான G. தாமோதரன்
மற்றும் அறக்கட்டளை நிர்வாக பொறுப்பாளர்கள் முத்துராஜ், ஞானேஸ்வரன்,
பாலசுப்பிரமணி மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.
இந்த சேவையில் மாருதி உட் ஒர்க்ஸ் நிறுவனத்தின் பணியாளர்கள் நாகேந்திரன்,
பாலா, கபிலன், ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.