மதுரை ஜூன் 15,
மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரியில் முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் நிகழாண்டு மாணவிகள் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த வியாழக்கிழமை நிறைவு பெற்றது. இந்தக் கல்லூரியில் இளநிலைப் பிரிவு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் உள்ளிட்ட 15 துறைகளில் 1, 230 இடங்கள் உள்ளன. நிகழாண்டு கல்லூரியில் சேர 12, 853 மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். கடந்த மாதம் 29 ஆம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு தொடங்கியது. இந்தக் கலந்தாய்வு நிறைவு பெற்றதை அடுத்து, கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், மனையியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை கடந்த திங்கள்கிழமை (ஜூன் 10) நடைபெற்றது. தொடர்ந்து, 12 ஆம் தேதி வணிகவியல், வணிக நிர்வாக வியல், பொருளாதாரம், வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களுக்கும், 13 ஆம் தேதி தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சூ. வானதி, பேராசிரியைகள் எஸ். சந்திரா, ஜெ. பி. சர்மிளா, வி. கபிலா, கே. சத்யா ஆகியோர் மாணவிகளை மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்தனர்.
இதில், குறைந்த அளவிலான மாணவிகள் மட்டுமே தேர்வு பெற்றனர். இன்னும் பெரும்பாலான இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மதிப்பெண்கள், இன சுழற்சி அடிப்படையில் இனி வரும் கலந்தாய்வுகளில் இடங்கள் நிரப்பப்படும் என கல்லூரி முதல்வர் தெரிவித்தார