திண்டுக்கல்லில் எஸ்.எம்.பிரதர்ஸ் நடத்தும் முதலாம் ஆண்டு கிரிக்கெட் திருவிழா வெற்றி பெற்ற அணியினருக்கு அமைச்சர் இ.பெரியசாமி பரிசுகளை வழங்கினார்!
திண்டுக்கல்லில் எஸ் எம் பிரதர்ஸ் நடத்தும் முதலாம் ஆண்டு கிரிக்கெட் திருவிழா வெற்றி பெற்ற அணியினருக்கு அமைச்சர் இ.பெரியசாமி பரிசுகளை வழங்கினார்
திண்டுக்கல் நந்தவன சாலை சத்தியமூர்த்திபுரம் பகுதியில் முன்னாள் கவுன்சிலர் , எஸ்.எம்.பிரதர்ஸ் கிரிக்கெட் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தலைமையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி பிறந்த நாள் மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் திருவிழா சாவித்திரி பள்ளியில் நடைபெற்றது இப்போட்டியில் 24 அணிகள் கலந்து கொண்டனர் போட்டியானது நாக் அவுட் முறையில் போட்டி நடைபெற்றது இறுதிப் போட்டியில் திண்டுக்கல் மெஜஸ்டிக் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது முதல் பரிசாக மெஜஸ்டிக் வாரியர்ஸ் அணிக்கு மெகா கோப்பை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் இரண்டாம் இடம் பிடித்த இயக்கம் பாய்ஸ் கிரிக்கெட் அணியினருக்கு கோப்பை மற்றும் 8000 ரொக்க பரிசும் மூன்றாம் இடம் பிடித்த திண்டுக்கல் அஸ்வின் சி.சி.அணியினருக்கு கோப்பை மற்றும் 6000 ரொக்க பரிசும் நான்காம் இடம் பிடித்த எஸ்.எம்.பாய்ஸ் அணியினருக்கு நான்காயிரமும் பரிசு வழங்கப்பட்டன
வெற்றி பெற்ற அணிகளுக்கு ஊரக வளர்ச்சித்துறைஅமைச்சர் இ.பெரியசாமி பரிசுகளை வழங்கினார் அவருடன் முன்னாள் கவுன்சிலரும் நான்காவது வட்டச் செயலாளரும் S.M பிரதர்ஸ் கிரிக்கெட் அணியின் ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் இந்த கிரிக்கெட் போட்டியினை சத்தியமூர்த்தி புரம் திமுக மகளிர் அணி சேர்ந்த அமுதவல்லி சக்திவேல் மற்றும் மகளிர் அணியினர் தொடங்கி வைத்தனர் இவ்விழாவில்வார்டு பிரதிநிதி பழனிச்சாமி,அரவிந்த் குமார் ,கார்த்திகேயன் காளிதாஸ், சுப்புலட்சுமி தேவி ,உமா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.