குளச்சல் அக் 3
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் செட்டி தெருவில் ஹபீப் என்பவர் வீட்டு பூனை குட்டி சுமார் 70 அடி ஆழமான கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. ஒரு நாள் முழுவதும் தவறி விழுந்த பூனை குட்டியை அதன் உரிமையாளர் மேலே எடுப்பதற்க்காக முயற்ச்சி செய்து முடியவில்லை. எனவே நேற்று குளச்சல் தீயணைப்பு காவல்துறையினருக்கு சமூக ஆர்வலர் முகம்மது சபீர் தகவல் கொடுத்தார். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு காவலர்கள் 70 அடி கிணற்றில் விழுந்த பூனை குட்டியை உயிருடன் மீட்டனார்.
துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு காவலருக்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.



