குளச்சல் ஏப 13
கராத்தே மாஸ்டர் வீட்டில் நுழைந்த நல்ல பாம்பை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உடையார் விளையில் வசித்து வருபவர் கராத்தே மாஸ்டர் ஜெயகர்ணன்(48) சம்பவத்தன்று இவரது வீட்டில் நல்ல பாம்பு புகுந்தது. இதனை தொடர்ந்து குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார் . தீயணைப்பு துறையினர் அளித்த ஆலோசனையின் பேரில் பாம்பு நுழைந்திருந்த இடத்தை சுற்றி வலை போட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. பின்னர் சில மணி நேரங்களில் வலையில் பாம்பு மாட்டி இருந்தது இதனைத் தொடர்ந்து குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின் பேரில் குளச்சல் தீயணைப்பு நிலைய சிறப்பு நிலை அலுவலர் ஜெகன் தலைமையில் அலுவலர் ஜேம்ஸ் மற்றும் பணியாளர்கள் துரை ராபின்,ராமச்சந்திரன்,மணிகண்டன், ஆகியோர் அடங்கிய குழுவினர். விரைந்து வந்து நல்ல பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.