தஞ்சாவூர்.ஏப்ரல் 17
தஞ்சாவூரில் தமிழ்நாடு தீயணைப் பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீவிபத்தில்லாத இந்தியா வை உருவாக்கிட ஒன்றிணை வோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம் நடைபெற்றது.
தஞ்சாவூர் பழைய மாவட்ட கலெக்டர் அலுவலக அருங்காட்சி யகம் வளாகத்தில் இந்த ஊர்வலத் தை மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் முன்னிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் கொடியத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து ,காந்திஜி சாலை வழியாக அரண்மனை வளாகத்தில் முடிவடைந்த இந்த ஊர்வலத்தில் தீ தடுப்பு ,தீ பாதுகாப்போம், தீ அணைக்கும் முறைகள் பற்றியும் தீயணைப்பு கருவிகளை பராமரிப் பது அவசியம் குறித்தும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர் கள், தன்னார்வ தொண்டர்கள் ஆகியோர் விழிப்புணர்வு அட்டை களை ஏந்தி சென்றனர்
நகர காவல் துணை கண்காணிப் பாளர் சோமசுந்தரம், கோட்டாட்சியர் இலக்கியா, தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் முருகேசன், நிலைய அலுவலர்கள் செல்வராஜ், மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



