மதுரை செப்டம்பர் 13,
மதுரை மாவட்டம் பெரியார் பேரூந்து நிலையம் அருகே கட்ரபாளையம் பகுதியில் தனியார் மகளிர் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது அதில் தங்கியிருந்தவர்களை அருகில் உள்ள மண்டபத்தில் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன், மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார் ஆகியோர் உடன் உள்ளனர்.



