நாகர்கோவில் ஜன 7
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிக்காட்டுதலின்படி 01.01.2025-ஐ தகுதி நாளாகக் கொண்டு புகைப்படத்துடன்கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2025 தொடர்பாக, இறுதி வாக்காளர் பட்டியல் கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா அவர்களால் நேற்று அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், அனைத்து உதவி வாக்களார் பதிவு அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இறுதி வாக்காளர் பட்டியல் 29.10.2024 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி வாக்காளர்களின் விபரம் உள்ளது. கடந்த மக்களவை தேர்தல் 2024ன் படி மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1698. தற்போதுள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1702. கன்னியாகுமரி மாவட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற தொகதியில் புதிதாக 2 வாக்குசாவடி மையம் மற்றும் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் 2 வாக்குசாவடி மையம் என மொத்தமாக 4 வாக்கு சாவடி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, தேர்தல் தனி வட்டாட்சியர் வினோத், வட்டாட்சியர்கள் முருகன் (அகஸ்தீஸ்வரம்) சஜித் (கல்குளம்) ஜூலியன் ஹீவர் (விளவங்கோடு), ராஜசேகர் (கிள்ளியூர்), கந்தசாமி (திருவட்டார்), தேர்தல் துணை வட்டாட்சியர்கள் குமார், ரியாஸ் அகமது, அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.