சட்டத்திற்கு புறம்பான பொதை பொருட்கள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடியை உருவாக்கும் நோக்கில் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பானது தூத்துக்குடி மாவட்ட காவல்துறையோடு இணைந்து தொடர் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ் மேல் நிலைப்பள்ளியில் வைத்து போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் கோ.ஜெபஸ்டின் செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற பேரணிக்கு புதியம்புத்தூர் ஊராட்சி மன்றத்தலைவி எம்.பழனிச்செல்வி, புதியம்புத்தூர் காவல் உதவி ஆய்வாளர் எம்.சீதாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிறுவனத்தலைவரும் மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான எம்.ஏ.தாமோதரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினராக ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்றத்தலைவரும் திமுக வடக்கு ஒன்றிய செயலாளருமான அ.இளையராஜா கலந்து கொண்டு போதைப் பொருட்களின் தீமைகள் மற்றும் போதைப் பொருட்களினால் சமூக பொருளாதார பாதிப்புகள் குறித்து மாணவ மாணவிகள் மத்தியில் விளக்கவுரையாற்றி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளியின் நுழைவு வாயிலில் தொடங்கிய பேரணியானது ஊராட்சி மன்ற அலுவலகம், சிவன் கோவில், சந்தை பஜார், நடுவக்குறிச்சி வரை சென்று புதியம்புத்தூர் பிரதான சாலை மீண்டும் பள்ளியை சென்றடைந்தது. பேரணி முடிவில் அனைவரும் போதை பொருளுக்கு எதிராக உறுதி மொழி எடுத்துக் கொண்டனர் இப்பேரணியில் துளசி சோசியல் டிரஸ்ட் தனலெட்சுமி, நியூ பாசக்கரங்கள் முத்துப்பாண்டியன், இளையோர் திருக்குறள் பேரவை ஆதிநாராயணன், பசுமை படை ஆசிரியர் எமர்சன் பொன்ராஜ், நாட்டு நலப்பணித் திட்ட ஆசிரியர் ஜெயந்தி மற்றும் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை போதை பொருள் தடுப்புக்குழு ஆசிரியர்கள் நெல்சன் ஜோசப், செல்வின் ஆகியோர் செய்து இருந்தனர். நிறைவாக உதவி தலைமை ஆசிரியர் கீதா செல்லம் நன்றி கூறினார்.



