பரமக்குடி, ஏப்.24: பரமக்குடியில் நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொது விநியோகத்திற்கு தனி துறையை உருவாக்குதல், இணையதள சேவையை மேம்படுத்த வேண்டும், உணவுப் பொருட்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்குதல்,, ஓய்வூதியம் உட்பட நிலுவையில் உள்ள 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சார் ஆட்சியர் அலுவலகம் எதிரில் நியாய விலை கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில துணைத்தலைவர் தினகரன் தலைமை வகித்தார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எதிர்ப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் நியாயவிலைக் கடை ஊழியர்கள் பங்கேற்றனர். போராட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட நியாய விலை கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
படம்
பரமக்குடியில் நியாய விலை கடை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



