பூதப்பாண்டி – அக்டோபர் _27
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் காளிகேசம் பகுதியில் நேற்று இரண்டாவது நாளாக காட்டாற்று வெள்ளம்.இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.காளிகேசம் வன சுற்றுலா பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவனத்துறை தடை விதிப்பு நீடிப்பு.
குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக காளிகேசம் பகுதியில் நேற்று இரண்டாவது நாளாக காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல். அதைப்போல் காளிகேசம் ஆற்றை ஆபத்தான முறையில் கடந்து செல்ல வேண்டாம் என ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் பொதுமக்களுக்கு வனத்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையோல் காளிகேசம் வன சுற்றுலா தலத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் வனத்துறை தடை விதித்துள்ளது. அப்பகுதியில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளார்கள்.இதனிடையே தடையை மீறி காளிகேசம் பகுதிக்கு சொகுசு காரில் சுற்றுலா வந்த மாதவலாயம் பகுதியை சேர்ந்த ஷாகுல் மற்றும் அவரின் குடும்பத்தினர் நண்பர்கள் வந்த நிலையில் தடையை மீறி வந்த காரணத்திற்காக அவர்களின் சொகுசு கார் பறிமுதல் வனத்துறையால் செய்யப்பட்டது.மேலும் அபதாரமும் விதிக்கப்பட்டது. வனத்துறை தடையை மீறி வரும் சுற்றுலா பயணிகள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் வனத்துறை கூறியுள்ளது. இதனிடையே காளிகேசம், கீரிப்பாறை மற்றும் வாழையத்து வயல் பகுதிகளில் கனமழை காரணமாக நேற்று இரண்டாவது நாளாக ரப்பர் பால் வெட்டும் தொழில் பாதிப்பு. அரசு மற்றும் தனியார் ரப்பர் தோட்டங்களுக்கு ரப்பர் பால் வெட்டும் பணிக்கு தொழிலாளர்கள் செல்லவில்லை.