ஈரோடு ஜன 16
ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் சட்டவிரோதமான மதுபானங்கள் விற்பனை தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 5 ந் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, போதை பொருட்களின் நடமாட்டத்தினை கட்டுப்படுத்திட மாவட்ட அளவில் காவல் துணை கண்காணிப்பாளர் மதுவிக்கு அமல்பிரிவு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருட்கள் மற்றும் மதுபானங்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்தல் மற்றும் விற்பனையினை தடுத்திட அறிவுறுத்தப்பட்டது. மேலும் சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் மற்றும் மதுபானங்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுத்திடவும் அறிவுறுத்தப்பட்டது என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜவகர் இகாப., உட்பட காவல்துறை, பள்ளிக்கல்வித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, கலால் துறை, உள்ளிட்ட துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.