ஈரோடு, ஜன. 7 –
பொங்கல் பண்டிகையை திராவிட பொங்கல் மற்றும் சமூக நீதிக்கான திருவிழாவாக நடத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் என்று அமைச்சர் முத்துசாமி அறிவித்து உள்ளார்.
இதன்படி ஈரோடு சூரியம்பாளையம் பகுதி திமுக சார்பில் நந்தா இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் ஆண் மற்றும் பெண்களுக்கான எறிபந்து போட்டி சூரியம் பாளையம் பகுதி செயலாளர் குமார வடிவேலு தலைமையில் நடந்தது. பகுதி செயலாளர்கள் அக்னி சந்துரு, குறிஞ்சி தண்டபாணி, முருகேசன், மண்டல தலைவர் சசிகுமார் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.
இதில் கல்லூரிகள் அரசுப்பள்ளி பொது கிளப்பை சேர்ந்த 10 அணிகளை சேர்ந்த 120 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர். இந்த நிகழ்ச்சியில் மாநகர விளையாட்டு அணி அமைப்பாளர் மகேந்திரன் வீராசாமி மற்றும் தி மு க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா வருகிற 10 ந் தேதி நடக்கிறது. இதில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு பரிசுகள் வழங்குகிறார்.



