மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் ஒன்றிய செயலாளர் முருகமணி ஏற்பட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு பேசினார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழகத்தில் 40க்கு 40 வெற்றி பெற செய்த கழகத்தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் தெரிவித்தும்,
மயிலாடுதுறை கிழக்கு ஒன்றியத்தில் முப்பெரும் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் மற்றும்
கழக ஆக்க பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் செல்வமணி, நகர மன்ற தலைவர் செல்வராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சத்தியசீலன், பால அருட்செல்வன், ஜெயவீரபாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர் சிவதாஸ் , ஒன்றிய செயலாளர் இளையபெருமாள், இமய நாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்தியசீலன் மயிலாடுதுறை கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.