திருப்பத்தூர்:ஆக:13, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் இயங்கி வரும் தூய நெஞ்சக் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருட்கள் தடுப்பு குறித்த உறுதி மொழியை ஏற்றுக்கொள்ளும் விதமாக நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் கொடி அசைத்து துவக்கி வைத்தார். மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையின் மூலம் இந்த நிகழ்ச்சியானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா பங்கேற்று சிறப்பித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் தூய நெஞ்சக் கல்லூரியின் அருட்தந்தைகள், மாணவ மாணவிகள், இந்திய செஞ்சிலுவை சங்கம் மற்றும் மாணவ மாணவிகள் என பலரும் பேரணியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மதுவிலக்கு தடுப்பு குறித்த உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.