தஞ்சாவூர். அக்.24
மழை காலங்களில் பொதுமக்கள் மின் விபத்தை தவிர்த்திட அறுந்து விழுந்த மின் கம்பிகளை தொடக் கூடாது என மேற்பார்வை பொறி யாளர் நளினி அறிவுறுத்தியுள்ளார்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிரமான கழகத்தின் தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நளினி வெளியிட்டு ள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது.
வடகிழக்கு பருவமழை முன்னிட்டு மழைக்காலங்களில் பொதுமக்கள் மின் விபத்தை தவிர்த்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் .மின்கம்பி அறுந்து விழுந்திருந்தால் மின் கம்பி அருகே செல்லக்கூடாது அறுந்து விழுந்த மின் கம்பியை தொடக்கூடாது. யாரையும் தொடவும் விடக்கூடாது .இது குறித்து அருகில் உள்ள மின்சார வாரியத்திற்கோ அல்லது 9498794987 என்ற எண்ணிற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மின் மாற்றிகள், மின் கம்பங்கள் மின் பகிர்வு பெட்டிகள் ஸ்டே வயர்கள் ஆகியவற்றின் அருகில் செல்ல வேண்டாம். மின்பெட்டி அருகே மழைக்காலங் களில் தண்ணீர் தேங்கி நிற்கும் போது அதன் அருகே செல்லக் கூடாது.
மின் கம்பிகளுக்கு அருகிலோ கீழோ பணி புரியும் போது போதிய இடைவெளி உள்ளதா என்பதை அறிந்து விழிப்புணர்வுடன் செயல் பட வேண்டும் .மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரியத்தி ன் அலுவலர்களை அணுக வேண்டும். மின் கம்பத்திலோ அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்ட வேண்டாம் மின் கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக் கூடாது.
அதன் மீது விளம்பர பலகைகள் கட்டக்கூடாது. மேலும் கொடி கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலை தவிர்த்திட வேண்டும் மின்துறை தொடர்பாக புகார்களு க்கு 9498794987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் . அனைத்து மின் நுகர்வோரும் தங்கள் மின் இணைப்புகளில் ஆர்.சி.பி என்னும் பாதுகாப்பு கருவியை பொருத்தி விலைமதிப்பற்ற தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது