சங்கரன்கோவில், ஏப்ரல் 21
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் புளியங்குடி செல்லும் சாலையில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் கலைஞர் படிப்பகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் வருகை தந்து கொடியேற்றி கலைஞர் படிப்பகத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ. தலைமையில் அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணிஸ்ரீ குமார் மாவட்ட பொருளாளர் இல. சரவணன் நகர செயலாளர் மு. பிரகாஷ் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகேஷ் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராயல் கார்த்தி மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளை வார்டு பொறுப்பாளர்கள். உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கலைஞர் படிப்பகம் அமைப்பு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர் சரவணன் மற்றும் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி சரவணன் ஆகியோர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்..