சங்கரன்கோவில்.ஜூன்.19.
தென்காசி வடக்கு மாவட்டம்
மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா,40/40 பாராளுமன்ற தேர்தல் வெற்றி விழா & வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் உள்ளிட்ட முப்பெரும் விழா குருக்கள்பட்டியில் வைத்து நடந்தது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார். ஒன்றிய அவைத் தலைவர் பரமையா, ஒன்றிய துணை செயலாளர்கள் சின்னக்குருசாமி,
மணிமேகலை ,சந்திரசேகரன் ஒன்றிய பொருளாளர் முத்துப்பாண்டியன்
மாவட்ட பிரதிநிதிகள் சண்முகப்பாண்டியன்,
செந்தூர்பாண்டியன், தங்கத்துரை முன்னிலை வகித்தனர். மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை வரவேற்றார். மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் செல்வி சுகுமாறன் தொகுத்து வழங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி கலந்து கொண்டு பேசியதாவது, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தமிழ்நாட்டிற்கு பல வலுதூக்கும் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை அள்ளிக் கொண்டு வந்ததைப் போல தனது சட்டமன்ற தொகுதி மக்களுக்கும் பல்வேறு சிறப்பான திட்டங்களை அள்ளிக் கொண்டு வந்து அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்.
தமிழகத்தில் திமுக கூட்டணி 40 தொகுதிகளை வென்று இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது இந்த வெற்றி திமுக அரசின் நல்லாட்சிக்கும் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் பாஜகவின் பிரிவினைவாதத்தை தொடர்ந்து எதிர்த்து போராடியதற்கு கிடைத்த வெற்றியாகும். ஒன்றியத்தில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும் அது தோல்வி போன்ற வெற்றி தான். இந்தியா கூட்டணியின் வெற்றி உலகமே கொண்டாடுகிறது நாம் ஆட்சியில் இல்லாவிட்டாலும் நாம் ஆட்சியில் இருப்பது போன்ற ஒரு நிலையை மக்கள் உருவாக்கி தந்துள்ளனர். ஒன்றியத்தில் கடந்த 10 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்த பிரதமர் மோடி அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை .ஒரு அரசு என்பது மக்களுக்கான பணியை செய்ய வேண்டும் அதை விடுத்து மதத்தால் மக்களை மாற்ற முயற்சித்தார்கள் .400 இடங்களை பிடிப்போம் என்றார்கள் ஆனால் இன்று மக்கள் அவர்களுக்கு எந்த நிலையை கொடுத்துள்ளார்கள் என்று அனைவருக்கும் தெரியும் , தமிழக மக்கள் அவர்களை வரவிடாமல் முழுவதுமாக ஒதுக்கி தள்ளிவிட்டனர். ஆர்.எஸ்.எஸ், பாஜகவிற்கு தமிழக மக்கள் நல்ல பாடத்தை இந்த தேர்தலில் புகட்டியுள்ளனர்..
திராவிட மாடல் ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை தருவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றினார். விடுபட்டவர்களுக்கும் விரைவில் வழங்கப்பட உள்ளது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், கடன் தள்ளுபடி, உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு மாதம் ஆயி்ரம் ரூபாய், இளைஞர்களுக்கும் மாதம் 1000 ரூபாய் என திட்டங்களை தந்து ஒவ்வொரு நாளும் மக்கள், இளைய தலைமுறையினர் முன்னேற வேண்டும் என சிந்தித்துக் கொண்டு இருப்பவர் நமது முதல்வர். இதன் காரணமாகத்தான் மக்கள் 40 க்கு 40 வெற்றியை தந்துள்ளனர். ஒன்றியத்தில் பாஜக அமைத்திருக்கும் ஆட்சி மைனாரிட்டி ஆட்சி, புதிய கல்விக் கொள்கை மூலம் நமது உயர்கல்வியை பறிக்க முயற்சிக்கிறார்கள் தமிழகத்தில் மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளை கொண்டு வந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் , பாஜக அரசு 30 ஆண்டுகளில் இந்தியா உயர்கல்வியில் 50 சதவீதத்தை எட்டும் என்கின்றனர், ஆனால் இந்த இலக்கை தமிழகத்தில் கலைஞர் ஏற்கனேவே செய்துமுடித்துவிட்டார். தமிழகத்தின் ஆட்சி முறையை பார்த்து கற்றுக்கொண்டு , தொலைந்து போகாமல் இருக்கப் பாருங்கள். தமிழகத்தை பாதுகாக்க திமுக ஆட்சி என்றும் நிலைத்து இருக்க வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் என்ற நிலையை உருவாக்கித் தரவேண்டும் , அதற்காக இன்றே தேர்தல் பணியை தொடங்க வேண்டும் என கூறினார். இதில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள்
தங்கவேலு, யூ எஸ் டி சீனிவாசன் பரமகுரு, தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் சரவணன் ,மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர்
டாக்டர் செண்பகவிநாயகம், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முத்துசெல்வி,மாவட்ட அவை தலைவர் பத்மநாபன், ஒன்றிய செயலாளர்கள்
லாலாசங்கரபாணடியன் கடற்கரை சேர்ம துரை சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், ,
சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, புளியங்குடி நகர் மன்ற தலைவர்விஜயா, தகவல் தொழில்நுட்ப அணி ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.