தருமபுரி மேற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய செயலாளர் காவேரி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய அவைத் தலைவர் செல்வராஜ் வரவேற்றார். மாவட்ட பிரதிநிதி பஸ்வராஜ், ஒன்றிய துணைச் செயலாளர்கள் தென்னரசு, சதீஷ்குமார், பொருளாளர் தண்டபாணி, மாவட்ட பிரதிநிதிகள் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆ. மணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். வரும் 2026- ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் குறித்தும், கழக ஆக்கப் பணிகள் குறித்தும் நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டு அறிந்தார்.முன்னாள் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி, நிர்வாகிகள் செல்வராஜ், தங்கமணி, ரேணுகாதேவி, நாட் டான் மாது, சண்முகம், உதயசூரியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



