திருப்பத்தூர்:மே:14
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் செவ்வாத்தூரில் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மு க ஸ்டாலின் உத்தரவின்பேரில் தமிழ்நாடு முழுவதும் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு ” என்னும் தலைப்பின் கீழ் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்று வரும் நிலையில் இக்கூட்டமானது நடைபெற்றது.
இந்நிலையில் இந்த சாதனை விளக்க பொதுக்கூட்டம் கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர் மாவட்ட கவுன்சிலர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர், வழக்கறிஞர் கே.ஏ.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பிரதிநிதி ஆசிரியர் ஆர்வில் அனைவரையும் வரவேற்று பேசினார். ஒன்றிய துணை செயலாளர்கள் வழக்கறிஞர் மாது, தீபா, சண்முகம், ஒன்றிய பொருளாளர் சக்கரை, மாவட்ட பிரதிநிதிகள் சக்கரவர்த்தி, சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி வாழ்த்துரை வழங்கினார்.
தலைமை கழக பேச்சாளர் பாலமுருகன் கலந்துகொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வேளாண்மைத் துறையில் பல்வேறு சாதனைகள் நடந்துள்ளது. குறிப்பாக முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சி பொறுப்பில் இருக்கும்போது விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்றும் தமிழகத்தின் முதல்வராக தளபதி செயலாற்றிக் கொண்டு இருக்கிறார். பெண்களுக்கான உரிமைகளை பெற்றுத் தந்தவர். மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறார். எத்தனையோ கட்சிகள் எதிர்த்து நின்றாலும் அதற்கு முடிவுரை எழுதுபவர் திராவிட மாடல் ஆட்சியின் நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி என்று குறிப்பிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நான்காண்டு சாதனைகளை விளக்கி பேசினார்.
மேலும் இக்கூட்டத்தில் திமுக ஆட்சியின் நலத்திட்டங்களையும், கந்திலி மத்திய ஒன்றியத்தில் மக்களுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்களையும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, மாவட்ட துணை செயலாளர்கள் மோகன், சம்பத்குமார், மாவட்ட பொருளாளர் ஜோதி ராஜன், திருப்பத்தூர் நகர கழக செயலாளர் வழக்கறிஞர் எஸ் ராசேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் அரசு, ரகுநாத், கந்திலி கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ், ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமதி திருமுருகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல், ஊராட்சி மன்ற தலைவர்கள் நித்தியானந்தம், மேனகா விவேகானந்தன், குமார், லட்சுமி கார்த்திகேயன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் முரளிதரன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் தமிழ் குடிமகன், ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி சுகுமார்,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தமிழ், துணை அமைப்பாளர்கள் பிரபாகரன்,யுவராஜ், கோபிநாத், மாதேஷ், மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், இளைஞரணியினர், கழக தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய ஆதிதிராவிடர் நலக்குழு பாலு நன்றியுரை வழங்கினார்.