மார்த்தாண்டம் , மார்- 23
மார்த்தாண்டம் அருகே உண்ணாமலை கடை பகுதியை சேர்ந்தவர் நரேந்திர சிங். இவர் தற்போது வெளியில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும்
கல்லுதொட்டி பகுதியை சேர்ந்த சாந்தா கோகுலம் என்பவருக்கும் கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் நரேந்திர சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினர் சேர்ந்து சாந்தா கோகுலத்திற்கு வரதட்சணை கொடுமை செய்து, அவருக்கு வரதட்சணையாக கொடுத்த 85 பவுன் நகை, ரூ. 3 லட்சம் மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்களையும் அபகரித்தனர்.
இது குறித்து சாந்தா கோகுலம் வரதட்சணை குறித்தும், விவாகரத்து கோரியும் குழித்துறை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் விசாரணை முடிந்து நீதிபதி மோசஸ் ஜெபசிங் நேற்று தீர்ப்பு வழங்கினார்.
அதில் சாந்தா கோகுலத்திற்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்ட நீதிபதி, வீட்டு வாடகை நிலுவைத் தொகை உட்பட ரூ. 19 லட்சத்து 29 ஆயிரம் ஜீவனாம்சத்தை சாந்தா கோகுலத்திற்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார். மேலும் ஏட்டு நரேந்திர சிங், அவரது குடும்பத்தினர் சேர்ந்து அபகரித்த 85 பவுன் நகைகளை உடனடியாக சார்ந்த உள்ளத்திற்கு திரும்ப வழங்க வேண்டும். என்றும் உத்தரவிட்டார்.