திண்டுக்கல்லில்
மாவட்ட அளவிலான வூசு போட்டி திண்டுக்கல் மாவட்ட வூசு சங்கம் சார்பில், 14 வயதுக்குட்பட்டோருக்கான மாவட்ட அளவிலான வூசு போட்டிகள் திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இப்போட்டி பேர்ஹேன்ட், ஷார்ட் வெப்பன், லாங் வெப்பன் மற்றும் குழுப் போட்டிகள் என 4 பிரிவுகளில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல், நத்தம், பழனி, வேடசந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 110-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றனர். இப்போட்டியினை வூசு சங்க தலைவர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் வெற்றி பெற்ற வீரர்கள் வருகிற 8-ந் தேதி திண்டிவனத்தில் நடக்கும் 21-வது மாநில சப் – ஜூனியர் பிரிவில் 5 போட்டியில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது . இப்போட்டிக்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட வூசு சங்க செயலாளர் ஜாக்கிசங்கர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். போட்டியின் முடிவில் பொருளாளர் கவிதா நன்றி கூறினார்.