தஞ்சாவூர். ஜன.31.
தஞ்சாவூர் மாவட்டம் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் மகப்பேறு அவசர சிகிச்சை பகுதியில் சிசு நல நோய் தொற்று சிகிச்சை பிரிவினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் திறந்து வைத்தார்
அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மாவட்ட அரசு இராசா ராசுதார் மருத்துவமனையில் மகப்பேறு அவசர சிகிச்சை பிரிவில் நோய் தொற்று உள்ள குழந்தைகளுக்கு புதிதாக குழந்தைகள் நல நோய்த் தொற்று சிகிச்சை பிரிவு திறக்கப்பட்டுள்ளது
இப்பிரிவில் தொற்றுள்ள 8 குழந்தைகளுக்கு தனியறையில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வத ன் மூலம் நல்ல நிலையில் உள்ள குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுக்க முடியும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலாஜி நாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.