கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், கிட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கட்டிகானப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஜாகீர்வெங்கடாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி நகராட்சி, இராசு வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ், காலை உணவு வழங்கப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ், அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், கிட்டம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி, கட்டிகானப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, ஜாகீர்வெங்கடாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி நகராட்சி, இராசு வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ், கோதுமை ரவா உப்மா மற்றும் காய்கறி சாம்பார் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவுகளை நேரில் பார்வையிட்டு, உணவை சாப்பிட்டு தரத்தை ஆய்வு செய்தார். மேலும், தங்களுக்கு வழங்கப்படும் உணவு சுவையாக உள்ளதா குறித்து மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தார். மேலும், நாள்தோறும் பள்ளிகளில் நடத்தப்படும் பாடங்களை வீட்டிற்கு சென்ற பிறகு அன்றைய தினமே படிக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசிப்பு திறன், கணித வாய்ப்பாடு நன்றாக கற்க வேண்டும் என மாணவ, மாணவிகளிடம் அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து, பள்ளி வளாகம், சமையலறை, குடிநீர், கழிப்பறை வசதிகளை பார்வையிட்டு, தூய்மையான முறையில் உணவு சமைக்க வேண்டும். மேலும், குழந்தைகளை பாயில் அமரவைத்து, பணியாளர்களே உணவு எடுத்து சென்று வழங்க வேண்டும். காலை நேரங்களில் நன்கு காய வைத்து ஆற வைத்த குடிநீரை வழங்க வேண்டும் என பணியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், பள்ளிகளில் உணவுப்பொருட்கள் பதிவேடு, மாணவ, மாணவியர்களின் வருகை பதிவேடு, நாள்தோறும் சமைக்கப்பட்ட உணவு மாதிரிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.உமா சங்கர், .சிவபிரகாசம், வட்டாட்சியர் த.வளர்மதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) .கணேசன் மற்றும் ஆசிரிய பெருமக்கள் உடனிருந்தனர்.