கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் துவங்கப்பட்டு 10 வது ஆண்டு கொண்டாடும் வகையில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் மற்றும் சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு . அவர்கள் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் துவங்கப்பட்டு 10 வது ஆண்டு கொண்டாடும் வகையில் பெண் குழந்தைகளை – காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் குறித்த ஒரு விழிப்புணர்வு வாகனம் மற்றும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தின் சார்பாக சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த ஒரு விழிப்புணர்வு வாகனம் துவக்கி வைக்கப்பட்டது.
இவ்வாகனங்கள் மூலம், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ், பாலினம் அறிந்து கருக்கலைப்பு செய்வதை தடுத்தல், பெண் குழந்தைகளின் உயிர் வாழ்தல் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல், பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை மேம்படுத்துதல், பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பங்கேற்பை ஊக்குவித்தல், குழந்தைகள் உதவி எண் 1098, மகளிர் உதவி எண் 181, முதியோர் உதவி எண் 14567 ஆகியவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.மேலும், சமூகநலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நலத்திட்டம் மற்றும் சட்டங்களான, புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம், குழந்தை திருமண தடுப்புச் சட்டம் – 2006, முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், நான்கு வகையான திருமண நிதியுதவி திட்டங்கள், சத்தியவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், திருநங்கைகளுக்கான நலத் திட்டங்கள், ஒருங்கிணைந்த சேவை மையம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் 2005, வரதட்சணை தடுப்புச் சட்டம் -1961, பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2013, மூத்த குடிமக்கள் நலச்சட்டம் 2007, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிருக்கான நலத் திட்டங்கள் குறித்து வட்டாரத்திற்கு இரண்டு நாட்கள் வீதம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூகநல அலுவலக கண்காணிப்பாளர் .வேடியப்பன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் .சரவணன், மாவட்ட சமூகநல அலுவலக பணியாளர்கள், மாவட்ட மகளிர் அதிகார மைய பணியாளர்கள், மாவட்ட திட்ட அலுவலக ) பணியாளர்கள் கலந்துகொண்டனர்.