திருப்பூர்மே:11
மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் வணிக வளாகத்தில் எங்களுக்கும் கடை ஒதுக்கி தர வேண்டும் திருநங்கைகள் திருப்பூர் மாவட்ட தலைவி திவ்யா வேண்டுகோள் திருப்பூர் வாவிபாளையம் பேருந்து நிலையம் அருகே தமிழகத்தில் முதல் முறையாக திருநங்கைகள் சார்பாக கடந்த ஒரு வார காலமாக பொதுமக்களுக்கு நீர் மோர் தர்பூசணி வெள்ளரிக்காய் வழங்கும் நிகழ்ச்சி தலைவி திவ்யா தலைமையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் கடந்த ஒரு மாதமாக வெப்பம் அதிகமாக இருப்பதால் மழை வேண்டி நீர் மோர் பந்தல் துவக்கும் முன்பு வருட பகவானுக்காக கும்மி பாடல் பாடி பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதுகுறித்து தலைவி திவ்யா பேசும்போது
தமிழகத்திலேயே முதல்முறையாக திருப்பூர் மாவட்டத்தில் தான் திருநங்கைகள் சார்பாக நீர் மோர் பந்தல் வழங்கப்பட்டு வருவதாகவும் மேலும் தமிழக அரசு திருப்பூர் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு இருக்கும் வணிக வளாகத்தில் எங்களுக்கு இடம் கொடுத்தாள் சொந்தமாக சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்ட அச்சு முறுக்கு அதிரசம் முருக்கு கடலை மிட்டாய் ஜிலேபி உள்ளிட்ட தின்பண்டங்கள் சுத்தமான முறையில் தயாரித்து விற்பனை செய்து வருவதாகவும் அரசு சார்பில் கடை ஒதுக்கீடு செய்து கொடுத்தால் தங்கள் வாழ்க்கைக்கு முன்னேற்றமாக இருப்பதாகவும் வேண்டுகோள் விடுத்தார்



